ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» September , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் முப்பெரும் விழா


ஆறுமுகனேரி கே.டி.கோசல்ராம் நற்பணி மன்றத்தின் சார்பில் மன்றத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா உள்பட முப்பெருஸ்ரீம் விழா நடைபெற்றது.
          விழாவிற்கு திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இரா.தங்கமணி தலைமை வகித்தார்.அஞ்சல்துறையைச் சேர்ந்த வி.சிவகணேசன் முன்னிலை வகித்தார்.
      விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மக்களவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி சிறப்பு விருன்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகளும் நோட்டு புத்தகங்களும் வழங்கினார். 
      நகர் நல மன்ற தலைவர் பூபால்ராஜன், முன்னாள் பாரதிய ஜனதா ஒன்றிய தலைவர் எம்.பற்குணபெருமாள், இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் வாரிசுகள் நல சங்க மாநிலத் தலைவர் .தவசிமுத்து, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் எஸ்.பேச்சிஅம்மாள், முன்னாள் திமுக நகரத் தலைவர் டி.எஸ். வேலன்,சுகந்தலை பிரகாஷ், எம்.ராமச்சந்திரன்,  கி.சுதாகர்,   மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.    
       இறுதியில் இரட்டைக் கொடி அருணாசலம் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply