தண்ணீரின்றி கருகி வரும் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பயிர்களை காக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரி உள்ளது.இது தொடர்பாக அதன் மாவட்ட தலைவர் ராமையா மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள மனு விபரம் வருமாறு:
தாமிரபரணி வடிகால் கோட்டத்தில் கடைசி அணையாக உள்ளது ஸ்ரீவைகுண்டம் அணை.இதில் வடகால் மற்றும் தென்கால் என இரு பாசன வாய்க்கால்கள் உள்ளன. இதன் மூலம் தலா 1300 ஏக்கர் நிலங்கள் பாசனத்தில் உள்ளன.முன்பு ஒன்று பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில்(திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) ஏ கிரேடு நஞ்சை நிலங்கள் எனப் பெயர் பெற்றவை தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலம் குளம் பாசன நிலங்களும் மற்றும் திருச்செந்தூர் வட்த்தில் உள்ள ஆத்தூர் குளம் பாசன நிலங்களும் ஆகும்.
அதில் தற்போதுள்ள நிலவரத்தில் ஆறுமுகமங்கலம் குளம் மட்டுமின்றி வடகால் பாசனத்தில் உள்ள கொற்கை குளம், பேய்க்குளம், பொட்டைக்குளம், பழையகாயல் குளம், கோரம்பள்ளம் குளம் மற்றும் அகரம் குளம் ஆகிய அனைத்து குளங்களிலும் போதிய தண்ணீர் இல்லாததால் அக்குளங்களை நம்பி பயிர் செய்துள்ள நெல், வாழை மற்றும் வெற்றிலை பயிர்கள் போன்ற பயிர்கள் கருகி வருகின்றன.
அதே நேரத்தில் தூத்துக்குடியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தினசரி பல்லாயிரக் கணக்கான லிட்டர் நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் பயிர் செய்துள்ள பயிர்கள் கருகி வருவதை கண்டு வேதனைக்குள்ளாகி உள்ளனர்.மேலும் வருங்காலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்வதும் அவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியதாகி உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டு பயிர்களை காக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழே கடலுக்கு வீணாகும்
தண்ணீரை முக்காணியில் அணை கட்டி தேக்கி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவ துடன் திருச்செந்தூர் பகுதிகளுக்கு குடிநீருக்கும் பயன்படுத்தலாம் எனவும் அவர் அம்மனுவில் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் இம்மனுவின் நகலை தாமிரபரணி பாளையங்கோட்டை வடிகால் கோட்டம் செ?ர்பொறியாளர், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி வடிகால் பகிர்வு உதவி செயற்பொறியாளர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
0 comments