ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» September , ஆறுமுகநேரி » தமிழகத்திற்கு பைப் லைன் மூலம் கேஸ் (இயற்கை எரிவாயு) கொண்டுவரும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவு படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


சாகுபுரம் டி.சி.டபிள்யூ. கலையரங்கில் வைத்து தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கத்தின் 12வது செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொழில்வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு தலைமை வகித்தார். தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்னவேல் கூறியதாவது.
தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்கள் தொழில் நகரங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால்; மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான பகுதியை இன்டஸ்ட்ரியல் காரிடர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தொழிற்சாலை மட்டும் அல்லாது வீடுகள்ää வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு பயன்படுத்துவதே சிக்கனமானதாக இருக்கும். சுற்றுச்சு10ழலும் பாதுகாக்கப்படும்.
இதற்காக ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயு பைப் லைன் மூலம் கொண்டு வரும் திட்டம் கடந்த 2007ம் ஆண்டே தீட்டப்பட்டது. ஆனால் திட்டமிடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இப்பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. கேரளாää ஆந்திராää கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அங்கு அனைத்துப் பகுதிகளுக்கும் இயற்கை எரிவாயு எளிதாக கிடைக்கிறது. 
தொழிற்சாலைகளுக்கு அத்தியாவசியத் தேவையான இயற்கை எரிவாயு எளிதி;ல் கிடைப்பதால் அங்கு உற்பத்தியாகும் பொருளுக்கான உற்பத்தி செலவு குறைய வாய்ப்புள்ளது. இதே நேரம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் உற்த்தியாகும் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கையை வருடத்திற்கு 6 என நிர்ணயிக்க போவதாக தெரிகிறது. இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும். பைப் லைன் மூலம் இயற்கை எரிவாயு கிடைக்கும் போது தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி செலவு குறைவதுடன்ää வீடுகளுக்கும் தட்டுப்பாடு இன்றி கேஸ் கிடைக்கும். எனவே தமிழக முதல்வர் தமிழகத்தில் பைப் லைன் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் கொண்டு வர வேண்டும். உரத்திற்கான வாட் வரியை தமிழக அரசு நீக்கி உள்ளது. வெளியில் உள்ள ஒரு சில மாநிலங்களில் வரி இருப்பதால் இங்கு உற்பத்தியாகும் உரங்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவிடுகிறது. இதனால் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. இப்பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இந்தியாவில் சில்லரை வர்த்த வணிகத்தில் உலக அளவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும். இங்கு 4 கோடி சில்லரை வர்த்தக வணிக கடைகள் உள்ளது. இதன் மூலம் 20 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ஏற்படும் போது இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இது மிகவும் கடுமையான சட்டமாகும். இதுகுறித்து நகர்புறங்களில் இருப்பவர்களுக்கே அதிகம் தெரிவதில்லை. அவ்வாறு இருக்கும போது கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு இச்சட்டம் பற்றி முற்றிலும் தெரிய வாய்ப்பில்லை. இதில் உள்ள யதார்த்த நிலைகளை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். கடுமையான சட்டம் இயற்றுவதை தடுத்து இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ரத்தினவேலு பேசினார்.
டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் பேசும் போது திருச்செந்தூர் டூ சென்னை இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே சென்று வருகிறது. இதனை தினசரி இயக்கப்படும் என  ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து விரைவில் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டு;ம் என கேட்டுக் கொண்டார். 
கூட்டத்தில் ஸ்பிக் தொழிற்சாலையின் உதவித் தலைவர் முத்து மனோகரன்ää டி.சி.டபிள்யூ. நிறுவன மேலாளர் கணேஷ்ää தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க பொருளாளர் ஜீயர்பாபுää துணைத் தலைவர்கள் தனுஷ்கோடிää கணேசன்ää இணை செயலாளர்கள் பிரபாகரன்ää மாதவன்ää டி.சி.டபிள்யூ. மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராஜன்ää பினோ உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0 comments

Leave a Reply