ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» September , காயல்பட்டினம் » காயல்பட்டணம் ரயில்வே கேட்டில் இரு தண்டவாளங்கள் இடையே குண்டும் குழியுமாக இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்வபர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.



திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையேயான அகல ரயில் பாதையில் திருச்செந்தூரை அடுத்து காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆறுமுகநேரி டூ காயல்பட்டணம் இடையேயான மெயின் ரோட்டில் ; காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பகுதியில் தண்டவாளங்களுக்கு இடையே மற்றும் வெளிப்பகுதியில் பிளேட் போன்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவைகள் முறையாகவும்ää சரியாகவும் பதிக்கப்படாமல் உள்ளது. மேலும் பதிக்கப்பட்டுள்ள பிளேட்டுகள் வெளியே தெரியாத வகையில் தார் போட்டு பூசியிருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த இடத்தில் சரல் போட்டு நிரப்பப்பட்டிருந்தது. இதில் அடிக்கடி விபத்து நடந்ததால் தார் போட்டு சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காகவே பிளேட் போடடனர். ஆனால் பிளேட் போட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் தார் போடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிது. மெயின்ரோடு இணையும் இடத்தில் தரமானதாக குண்டும் குழியும் இன்றி இருந்தால் தான் ரோட்டில் வரும் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் எளிதாக தண்டவாள பகுதியில் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் குண்டும் குழியுமாக இருப்பதால் பலர் இதில் விழுந்து எழுந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. குறிப்பாக பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் தினமும் விழுந்து காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து  விபத்துக்கள் ஏற்படும் முன் தார் போட்டு சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments

Leave a Reply