குரும்பூர் ரயில்நிலையம் சமீபம் தண்டவாளத்தின் அருகில் கட்டித் தொழிலாளி கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மனைவி மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் போலீஸார் கைது செய்து விசார ணை செய்து வருகின்றனர்.
குரும்பூர் அருகிலுள்ள வீரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் பாலையா நாடார் மகன் ராமர்(40).கட்டிடத் தொழிலாளி.இவரது மனைவி சுந்தரி(35).இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ராமர் தனது குடும்பத்தினருடன் முத்தையாபுரத்தில் தங்கி தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ராமர் குரும்பூர் ரயில் நிலையம் சமீபம் தண்டவாளம் அருகில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.அருகில் ரத்தக் காயத்துடன் பாறாங்கல், மதுபாட்டில், தம்ப்ளர்கள் மற்றும் தேங்காய் முதலியன கிடந்தன.
சம்பவ இடத்தினை ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், ஆய்வாளர் பட்டாணி, உதவி ஆய்வாளர்கள் கதிரேசன் மற்றும் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் போலீஸார் முத்தையாபுரம் விரைந்து ராமர் வீட்டிலிருந்த அவரது மனைவி சுந்தரி மற்றும் ராமர் உறவினரான குரும்பூர் அருகிலுள்ள திருமலர்புரத்தைச் சேர்ந்த முத்து பெரியசாமியையும்(38) கைது செய்தனர்.
கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:முத்து பெரியசாமியின் மனைவி ஒரு வருடத்திற்கு பின் இறந்துவிட்டார்.அதன் பின்னர் முத்து பெரியசாமி ராமருடன் முத்தையாபுரத்தில் அவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தாராம்.இந்நிலையில் சுந்தரிக்கும் முத்து பெரியசாமிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகவும் அதனை அறிந்து ஊருக்கு வந்து புகார் செய்ய ஞாயிற்றுக்கிழமை ராமர் ஊர் வந்த போது அதை அறிந்து வந்த முத்து பெரியசாமி, ராமரை சமாதானப்படுத்தி அவருக்கு மது வாங்கி கொடுத்து ரயில்வே தணன்டவாளம் அருகில் பாறாங்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments