குரும்பூர் அருகில் குரங்கன் தட்டு கிராமத்தில் தீவிபத்தில் வீடிழந்தவர்களு க்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரி உள்ளது.இது தொடர்பாக அதன் மாவட்ட தலைவர் ராமையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த வியாழக்கிழமை குரும்பூர் அருகிலுள்ள குரங்கன் தட்டு கிராமத்தில் திடீரென இரவு நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 வீடுகள் எரிந்து சாம்பலாகின.இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளே குடியிருந்து வந்தனர்.
தீவிபத்திற்கு பின் அவர்கள் திறந்த வெளியில் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.அவர்களுக்கு நிவாரணத்தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.அவர்களு
க்கு தீப் பிடிக்காத வீடுகள் தமிழக அரசு சார்பில் கட்டிக் கொடுக்க வேண்டும்.மேலும் துணிமணிகள் மற்றும் பாத்திரங்களின்றி அவர்கள் அவதிப் படுகின்றனர்.
அவர்களுக்கு அடிப்படையாக தேவையான அனைத்து உதவிகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டுமென அவர் கோரி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் ராமையா, தாலுகா தலைவர் நடேச ஆதித்தன், தாலுகா செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

0 comments