ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி உள்ளது.
ஆறுமுகனேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.ஆறுமு கனேரி நகர செயலாளராக மீண்டும் சு.ஜெயபாண்டியன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அதிகரித்துவரும் ஜனத்தொகையினை கருதி அரசு மருத்துவமனையாக ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவதோடு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்
உயிர் காக்கும் மருந்துகளும் சித்த மருந்துகளும் தட்டுபாடின்றி கிடைக்க செய்ய வேண்டும்.
பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.சாலை வசதி இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் சாலைவசதி செய்திட வேண்டும்.மின் வாரிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும்.
காமராஜ் பூங்காவில் உள்ள பழுதான சிறுவர் விளையாட்டு சாதனங்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் க.ஆறுமுகபெருமாள், டி.முருகன், ஏ.சங்கரன், தனசிங், பேச்சிமுத்து, பட்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 comments