தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் குரங்கன்தட்டு கிராமத்தில் வியாழக் கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 46 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.தீயணைப்பு வண்டி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குரும்பூர் அருகில் நல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தது குரங்கன்தட்டு கிராமம். இக் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.அனைவரும் விவசாய கூலித் தொழிலாளிகள்.வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இங்குள்ள பழைய தெருவில் பெரியசாமி என்பவரது வீட்டில் அவரது மனைவி முனியம்மாள்(45) குத்து விளக்கேற்றி வைத்து விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம்.திடீரென வீசிய சூறைக்காற்றால் விளக்கு தீபரவி குடிசையில் தீ பிடித்து.அருகில் உள்ள வீரபாண்டி குடிசைக்கு தீபரவி அங்குள்ள சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீ பரவியது.இச்சப்தம் கேட்டு குடிசைகளிலிருந்து மக்கள் வீட்டில் உடமைகள் அப்படியே போட்டு விட்டு குழந்தைகளுடன் வெளியேறினர்.இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.காற்றினால் தீ மள மளவென பரவியதால் தீவிபத்தில் 46 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகி விட்டன.சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருட்டு சூழ்ந்நததால் மீட்பு பணி தாமதம் ஆகியது.குடிசைகளில் எந்தவித பொருட்களும் தப்பவில்லை.அனைத்தும் சாம்பலாகி விட்டன.
தகவலளித்தும் தீயணைப்பு வண்டிகள் வராததினார் குரும்பூர்-திருச்செந்தூர் சாலையில் கிராம மக்கள் சுமார் 150 பேர் மரத்தை அறுத்து குறுக்கே போட்டுமறியலில் ஈடுபட்டனர்.ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், குரும்பூர் ஆய்வாளர் பட்டாணி மற்றும் உதவி ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து கிராம மக்களை சமாதனப்படுத்தி சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.சுமார் 30 நிமிடம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப் பட்டது.மாற்று வழியில் பேரூந்து இயக்கப்பட்டது.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தி லிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தனர்.
திருச்செந்தூர் தாசில்தார் வீராசாமி, ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற தலைவர் சா.பொன்ராஜ் மற்றும் திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் கோபால் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.




0 comments