ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » கருகும் பயிரை காக்க முக்காணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.


கருகும் வாழைப் பயிரை காக்க முக்காணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
        முக்காணி பேரூந்து நிலையம் அருகில் சீனிவாச ராவ் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க முக்காணி கிளை தலைவர் எம்.எம்.மாரியப்பன் தலைமை வகித்தார்.
          செயலாளர் .ஆர்.குருசாமி, பொருளாளர் து.சந்தணகுமார், உதவித் தலைவர் எம்.சின்னத்தம்பி, உதவி செயலாளர் சு..மாரியப்பன், இந்தி கம்யூனிஸ்ட் முக்காணி கிளை செயலாளர் என்.வீரபாகு, உதவி செயலாளர்கள் ஆர்.கணபதி, எஸ்.கோபால் மற்றும் பொருளாளர் பி.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் .மோகன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.நல்லையா, தாமிரபரணி பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், என்.சுப்பு மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நயினார் நாகேந்திரன் பேசுகையில் ஒருங்கிணைந்த மாவட்டமாக திருநெல்வேலி இருந்த போது தூத்துக்குடி மாவட்ட சுதந்திர போராட்ட வீரரும் மக்களவை உறுப்பினராக இருந்தவருமான மறைந்த கே.டி.கோசல்ராம் சென்ட் ரூபாய் 50க்கு நிலம் வாங்கி மணிமுத்தாறு அணை கட்ட செய்தார்.தற்போது அந்த அணையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு விவசாயப் பயிர்களை காக்க நீர் வழங்க மறுக்கப்படுகிறது.
         தாமிரபரணி ஆற்று நீரை பொதுப்பணித்துறை ஆயிரம் லிட்டர் ரூபாய் 5என விற்க அதனை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆயிரம் லிட்டர் ரூபாய் 15க்கு விற்பனை செய்கிறது.தனியார் தொழிற்சாலைகளோ ஒரு லிட்டர் பாட்டிலில் அதனை அடைத்து ரூபாய் 12க்கு விற்கின்றனர்.அதிலும் நஷ்டம் என கூறும் அந்நிறுவனங்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பல கோடி பாக்கி வைத்துள்ளனர்.மேலும் வழங்கி வரும் 20மில்லியன் காலன் நீரை 23மி்ல்லியன் காலன் நீராக அதிகரித்து தரக் கோருகின்றனர்.அரசு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து நீர் வழங்க வேண்டுமென்றார்.
           இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவிச் செயலாளர் என்.ராமசாமி நன்றி கூறினர்.     

0 comments

Leave a Reply