ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகளின் விபரம் சேகரிப்பு


சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகள் பற்றிய
விபரம் சேகரிக்கப்பட உள்ளதால் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் தாலுகா
அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இது
குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் விபரம்
மற்றும் அவர்களது வாரிசுகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் சுதந்திர போராட்ட தியாகிகள்
மற்றும் வாரிசுகள் தங்கள் வசமுள்ள ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட தாலுகா
அலுவலகத்திற்கு சென்று தங்களது சுய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply