ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி ஆன்மா தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்குகிறார் வழக்கறிஞர் நடேச ஆதித்தன்.

ஆறுமுகனேரியில் ஆன்மா தொண்டு நிறுவனம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
                     ஆறுமுகனேரியில் ஆன்மா தொண்டு நிறுவன 12வது ஆண்டு விழா நடைபெற்றது.நிறுவன தலைவர் கணேஷ் குமார் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் நடேச ஆதித்தன் கலந்து கொண்டு ஆறுமுகனேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆத்தூர், நல்லூர் பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகளை, பாட புத்தகங்களையும் மற்றும் மருத்துவ உதவித் தொகைகளையும் வழங்கினார்.
            விழாவில் கந்தசாமி, சுப்பிரமணியன், ரவி,ராதாகிருஷ்ணன், மாசிலாமணி, பொன்சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் முருகபூபதி அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்


0 comments

Leave a Reply