மூலவர் | பிரம்மசக்தி அம்மன் |
பரிவாரத் தெய்வங்கள் | சுடலைமாடன் பட்டாணிசுவாமி கிழகத்திமுத்து ஆதிகுருசாமி இசக்கிஅம்மன் தெய்வப்பெருமாள் |
நடைத்திறப்பு | செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.00 மணி அளவில் வழிபாடு நடைபெறுகிறது. |
நிகழ்த்துக் கலைகள் | கணியான் கூத்து மூலம் அம்மனின் கதை பாடப்படுகிறது. |
திருவிழாக்கள் | ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு நாளன்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆனி மாதம் வருடாபிசேகம் ஆடி மாதம் 4 வது செவ்வாய் கொடைவிழா கார்த்திகை மாதம் கார்த்திகை முசு |
நேர்த்திக் கடன்கள் | பொட்டுத்தாலி கடையம் மணி சேலை வழிபாட்டிற்கு தேவையான பொருட்கள் வழங்குதல் சர்க்கரை பொங்கலிடுதல் |
பிறசெய்திகள் | திருச்செந்தூருக்கு மேற்கே உள்ள பிச்சிவிளைமணற்குன்று மீது இத்தெய்வம் குடியிருந்தது. அந்நாளில் வழிபடும் மக்கள் கடுமையான நோயினால் வாடினார். அவ்வேளை அம்மன் தோன்றி மக்களை வடதிசை நோக்கி செல்லக் கூறினாள். அவ்வாறு வந்த மக்களுடன் அம்மனும் வந்தமர்ந்து கேட்டவரம் கொடுத்து எல்லா மக்களையும் காத்து வருகிறாள். கார்த்திகை மாதம் 30 நாட்களும் வரிதாரர்கள் அசைவ உணவு உண்பது இல்லை. |
You Are Here: Home» Hindu , Temples » பிரம்மசக்தி அம்மன் கோயில் - பூவரசூர் (குன்றுடையார் குடும்பக் குலதெய்வம்)
0 comments