ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோவிலில் நடைபெற்ற வருஷாபிஷேகம்.


ஆறுமுகனேரி ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீகிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோவில்களில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

               ஆறுமுகனேரி நடுத்தெரு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் திருக்கோவில் மற்றும் காந்தி தெரு ஸ்ரீகிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
         19வது வருஷாபிஷேகத்தினை முன்னிட்டு அத் திருக்கோவிலில் ஸ்ரீபிரம்மசக்தி பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக சாந்தி பூஜை முதலியன நடைபெற்றன.பின்னர் ஸ்ரீமகா மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் ஸ்வயம்வரபார்வதி ஹோமம் முதலியன நடைபெற்றது.பின்னர் விமான கும்பத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனையும் நடைபெற்றன.
            பின்னர் கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோவிலில் வருஷா பிஷேக சிறப்பு பூஜையும், சாந்தி ஹோமமும் அலங்கார தீபாரதனையும் நடைபெற்றன.சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் வடபழனி சுரேஷ், சந்தோஷ், தாம்பரம் ஸ்ரீதர் மற்றும் போரூர் பிச்சை ஆகியோர் நடத்தி வைத்தனர்.
         மதியம் அன்னதானமும் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

0 comments

Leave a Reply