ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , ஆறுமுகநேரி » மூலக்கரை கிராமத்தில் மூடியிருந்த தொழிலதிபர்கள் வீடுகளில் திருட்டு


ஆறுமுகனேரி அருகிலுள்ள மூலக்கரை கிராமத்தில் இரு தொழிலதிபர்கள் வீடுகளில் திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
            மூலக்கரை கிராமத்தில் மூடியிருந்த பிரபல தொழிலதிபர்கள் இருவர் வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.ரூபாய் 62 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் திருடிசென்றுள்ளனர்.
            ஆறுமுகனேரி அருகிலுள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.பிரபல தொழிலதிபர்.இவர் சென்னையில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார்.கோவில் திருவிழா உள்ளிட்ட விசேஷ காலங்களில் இவர் மூலக்கரையில் வந்து தங்கி செல்வது வழக்கம்.மூலக்கரையில் பூட்டி கிடந்த இவரது வீட்டில் கடந்த 19ஆம் தேதி முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து படுக்கை அறை அலமாரியை உடைத்து அதிலிருந்த 2 ஜோடி கம்மல், தங்கக்காசு, வெள்ளிக் குத்து விளக்கு, வெள்ளி தாம்பூலம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூபாய் 47 ஆயிரம் ஆகும்.ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
             அதே தினத்தன்று அதே பகுதியைச் சேர்ந்தவர்  பாஸ்கரன்.தொழிலதிபர்.குரும்பூரில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு குடும்பத்தினருடன் தங்கி வருகிறார். அவரது மூலக்கரை பண்ணை வீட்டிலும் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்புகுந்து அவரது படுக்கை அறையிலிருந்த தலா 100 கிராம் எடையுள்ள காமாட்சி விளக்கு இரண்டு 10கிராம் எடை யுள்ள வெள்ளி தாம்பூலம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.இதன் மதிப்பு ரூபாய் 15 ஆயிரம் ஆகும்.
    இது தொடர்பாகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.              

0 comments

Leave a Reply