ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் டீக்கடை மற்றும் வார சந்தை கடைகள் எரிந்து சேதமாகின.
ஆறுமுகனேரியில் உள்ள சிவன் கோவிலிற்கு சொந்த மான வாரசந்தை ஒன்று உள்ளது.வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை கூடும் இச்சந்தை.இச் சந்தையின் கீழ்புறம் உள்ள கூரை வேய்ந்த நான்கு கடைகள் மற்றும் தூத்துக்குடி-திருச்செந்தூர் மெயின் ரோட்டினை நோக்கி உள்ள டீக்கடையும் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமாகின.டீக்கடையில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், கேஸ் அடுப்பு, மின் விசிறி மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து சேதமாகின.
தகவலறிந்து திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்களும் மற்றும் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன தீயணைப்பு வீரர்களும் வருகை தந்து தீயை அணைத்தனர்.மெயின் ரோட்டினருகில் தீவிபத்து நடைபெற்றதால் அவ்வழியே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றத் தலைவர் சா.பொன்ராஜ் மற்றும் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அ.செல்வலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
0 comments