இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில், திருப்பணிகள் மேற்கொள்ளும்போது பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அது தொடர்பான விதிமுறைகள், வழிமுறைகள் பற்றிய சீராய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை, வேலூர், விழுப்புரம் மண்டலங்களை சேர்ந்த செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை மண்டலங்கள் வாரியாக தொடர்ந்து 10 நாட்கள் இந்த சீராய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட தகவல் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments