கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3–ஆம் தேதி ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 904 ஆக இருந்தது. அதையடுத்து விலை தொடர்ந்து சரிந்தது.
நேற்று ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 640 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 504 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.2,438–க்கு விற்கிறது.
பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தை விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளியும் இன்று கிலோவுக்கு ரூ.555 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.35 ஆயிரத்து 220 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.37.70–க்கு விற்கிறது.
0 comments