ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » தீபாவளி முன்பணம் வழங்குவதில் தனியார் பள்ளிகளில் காலதாமதம்: ஆசிரியர்கள் தவிப்பு

Image result for ஆசிரியர்



கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள தனியார் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கால தாமதம் ஆகி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தில் அரசு நிதி உதவி பெறும் தனியார் 32 உள்ளது. இதில் 8 நடுநிலைப்பள்ளியும் அடங்கும். இதில் 120 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு ரூ 5 ஆயிரம் முன் பணம் வழங்கப்படும். 

இந்த பணம் அடுத்து வரும் 10 மாதத்துக்கு மாதம் 500 ரூபாய் பிடித்ம் செய்யப்படும். இந்த வருடம் இது வரை அந்த பணம் வேண்டி ஸ்ரீவைகுண்டம் கருவூலத்துக்கு பில் அனுப்பி வைத்தனர். ஆனால் பணம் இல்லை என்று திரும்பி விட்டது. மேலும் இந்த முன்பணம் வழங்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் பணம் வழங்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருங்குளம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக பணம் அனுப்பபட்டு, அங்கு பணம் வாங்க ஆசிரியர் இல்லாமல் அந்த பணம் கருவூலத்தில் அப்படியே உள்ளது. ஆனால் தனியார் உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் போதிய பணம் வழங்கவில்லை. எனவே அனைவரும் தீபாவளி முன்பணம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் முறைப்படி மாவட்ட கல்வி அலுவலகத்தினை அனுகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. தீபாவளிக்கு இரண்டு நாளே உள்ள நிலையில் பணம் வழங்காதது தனியார் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply