ஆத்தூர் அருகிலுள்ள தலைவன்வடலி சேதுராஜா தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகள் சிவாவைஷ்ணவி (5). இவர், இங்குள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சிவாவைஷ்ணவி விளையாடுவதற்காக வெளியே ஓடி வந்தாராம். அப்போது அதே ஊரைச்சேர்ந்த சுயம்பு மகன் பேச்சிமுத்து (43) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவாவைஷ்ணவி மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த சிறுமிக்கு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து பேச்சிமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
You Are Here: Home» ஆத்தூர் » தலைவன்வடலியில் விபத்து: சிறுமி சாவு
0 comments