தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக,
திருச்சி - சந்திரகாசி இடையே நவம்பர் 8ம் தேதி காலை 10.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில் 9ம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும்.
கோவையில் இருந்து சென்னைக்கு நவம்பர் 11ம் தேதி காலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சந்திரகாசியில் இருந்து திருச்சிக்கு நவம்பர் 10ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
நாகர்கோயிலில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக பாட்னாவுக்கு நவம்பர் 9ம் தேதி காலை 8.15க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மேலும் சில சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நாளை முன்பதிவு தொடக்கம்:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் துவங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
0 comments