ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு பொறியியல் பட்டயபடிப்பு (சிவில்) தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணிக்காலியிடங்கள்


தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு  பொறியியல் பட்டயபடிப்பு (சிவில்) தேர்ச்சி பெற்றவர்களுக்கான  பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு பொறியியல் பட்டயபடிப்பு (சிவில்) தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் மாதிரி  விண்ணப்பம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த  இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியும், விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய முழு விண்ணப்பப் படிவத்தினை வரும் நவம்பர் 18ம்தேதி  மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர் (நிர்வாகம்), முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத்துறை), பொதுப்பணித்துறை வளாகம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply