சிறுபான்மையினர் ஆணைய குழு நவம்பர் 5 இல் வருகை - ஆட்சியர் தகவல்
தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நவம்பர் 5 ஆம் தேதி தூத்துக்குடி வருகின்றனர்.
சிறுபான்மையினர் ஆணைய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் சமுதாயத் தலைவர்கள், அதன் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்காக தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிகின்றனர்.
எனவே, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்த ஆணையக்குழுவினரை சந்தித்து தங்களது குறைகள், அரசின் நலத்திட்டங்கள், சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 comments