நெல்லை– திருச்செந்தூர் இடையிலான ரெயில்வே வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு பணி நேற்று நடந்தது. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க், மின்சார ரெயில் பிரிவு கூடுதல் மேலாளர் ஆர்.பி.எஸ்.பாபு, வணிகத்துறை மேலாளர் ராமலிங்கம், இயக்க மேலாளர் செந்தில்குமார், பாதுகாப்பு படை ஆணையாளர் சங்கர் குட்டி, போக்குவரத்து ஆய்வாளர் ஜான்சன் அப்பாத்துரை ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி ரெயில் நிலைய அலுவலகம், பிளாட்பாரம், சிக்னல் அறை உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டனர்.
ரெயில்வே அதிகாரிகளிடம், ஆறுமுகநேரி ரெயில் நிலைய அபிவிருத்தி குழு தலைவர் பி.ஆர்.ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் இரா.தங்கமணி, கவுன்சிலர் லட்சுமணன் ஆகியோர் கோரிக்கை மனு வழங்கினர். அதில், ஆறுமுகநேரி ரெயில் நிலைய பிளாட்பாரங்களை உயர்த்தி அமைக்க வேண்டும், மின் விளக்கு, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ரெயில்வே அதிகாரிகளை ரெயில் நிலைய மேலாளர்கள் சிவசங்கர நாராயணன், சசிகாந்த் ஆகியோர் வரவேற்றனர்.
0 comments