ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » பச்சை சாத்தி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 8–ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். 10–ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
பச்சை சாத்தி கோலத்தில்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 2–ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 8–ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு வந்த சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை நிற மலர்கள் சூடி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
 தேரோட்டம்
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.கோபால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10–ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply