நாசரேத் அருகேயுள்ள தேமான்குளம்-மூலக்கரை றி.என். டி.றி.ஏ தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை விகித்தார். கல்வி புரவலர் பொன்ராஜ் முன்னிலை விகித்தார். ஆழ்வார்திருநகரி சித்த வைத்தியர் காஜாமுகைதீன் பேசினார். மாணவர்கள் தாங்கள் செய்து வந்த மாதிரி பொருள்கள் மூலம் கற்றல் பயன்பாட்டை செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர். திறன் அடிப்படையில் அறிவியல் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர்.
இதில், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, முத்துஜானகி, விஜயா, லட்சுமி, பார்வதி, மாலதி, சாந்தி, கதிர்ச்செல்வி, மல்லிகா, ஜெயலட்சுமி, சுபா, மாரிசெல்வம், கலாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவி ஆசிரியை ஏசுவடியாள்செல்வி நன்றி கூறினார்.
Courtesy : Dinamani.com
0 comments