காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவியர் வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி நடத்தினர்.
தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், நடைபெற்ற இம் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவில் தொடங்கி, தைக்கா பஜார் வழியாக ஹாஜியப்பா தைக்கா பள்ளி வரை நடைபெற்றது. இச்சாலைகளின் இரு ஓரங்களிலும் மாணவியர் கைகோர்த்து நின்றனர்.
கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெ.பெல்லா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
அவருடன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜ், வட்டாட்சியர் நல்லசிவன், வருவாய் ஆய்வாளர் வசந்தி, காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து, நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் துணைச் செயலர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், முதல்வர் முனைவர் சசிகலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.பொதுமக்களை வாக்களிக்கத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் மாணவியர் கையில் ஏந்தியிருந்தனர்.
Courtesy : Dinamani.com
0 comments