சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் 43 ஆவது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
தொடக்க நாள் விழாவில், நிர்வாக உதவித்தலைவர் (பணியகம்) ஆர்.ஜெயகுமார் கலந்துகொண்டு பாதுகாப்பு கொடியேற்றினார். அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிறைவு நாள் விழாவுக்கு, நிர்வாக உதவித்தலைவர் (பணியகம்) ஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மதுரை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குநர் வி.தங்கராஜ் மற்றும் தூத்துக்குடி இணை இயக்குநர் அப்பாவு சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மனிதவள பொதுமேலாளர் ஆர்.பசுபதி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தார். கவிதை, விநாடி-வினா, பட்டிமன்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிர்வாக உதவித்தலைவர் (குளோர் அல்கலி) சுபாஷ் டாண்டன் வரவேற்றார். பாதுகாப்பு ஆண்டறிக்கையை பாதுகாப்பு மேலாளர் எஸ்.ராஜா சங்கர் சமர்ப்பித்தார். இறுதியில் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மரக்கன்றுகளை நட்டினர். நிகழ்ச்சியில், ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Courtesy: Dinamani.com
0 comments