ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் கோயிலிலுள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு பாதுகாக்கப்படவும்,கோயிலில் உடைந்துள்ள துவாரபாலகர் சிலையைச் சரி செய்திடவும்மாண்புமிகு முதலமைச்சருக்குக் கோரிக்கை



தமிழகத் தொல்லியல் கழகத்தின் உறுப்பினரும்,காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனருமான முனைவர் த.த.தவசிமுத்து மாண்புமிகு முதலமைச்சர்,டாக்டர்.அம்மா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
                  [1]தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கோயிலினுள் உள்பிரகாரம் உள்துறைஅலுவலகத்தையை ஒட்டி, சிற்பவிதிகளுக்கு மாறாக வலது கைஉடைந்துகாணப்படும் துவாரபாலகரான வீரகேசரியின் சிற்பத்தைப் புதுப்பித்திட உடனடியாக ஆணையிட வேண்டுகிறேன். ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோயிலின் உண்டியல் வருமானத்தை மட்டும் பெருமையாக நாளிதழில் வெளியிடும் கோயில் நிர்வாகம் கோயிலின் முக்கியமான 
கற்சிற்பம் உடைந்தது பற்றி கவலை கொள்ளாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தன்னைக்காண வரும் பக்தர்களை,உள்ளே காக்க வல்ல முருகன் உள்ளே இருக்கிறான் என்று சுட்டிக்காட்டும் கை உடைந்துள்ளது. அம்மா,அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலின் ஆகமத்தை நிலை நிறுத்திட வேண்டுகிறேன்.
      [2]கோயிலின் தென்கிழக்கு மூலையில் நட்டுவைக்கப்பட்டு இருக்கும் கி.பி.875 ஆம்ஆண்டினைச்சேர்ந்த இரண்டாம் வரகுணப்பாண்டியனுடைய மிக அரியதான வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.தமிழகத்தில் வட்டெழுத்துக்கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே உள்ளன.இந்நிலையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மீது தேவையற்றப் பலகைகள், இரும்புச்சட்டங்கள்,கனமானப் பொருட்கள் பணியாளர்களால் வீசப்பட்டு கல்வெட்டின் மேற்பகுதி மற்றும் வட்டெழுத்துக்கள் சிதையத்தொடங்கி விட்டன.
இதுகுறித்து பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்குக்கொண்டு சென்றும் பயனில்லை.தினமணி நாளிதழில்ஆராய்ச்சிமணிப் பகுதியில் எழுதியும் பயனில்லை.எனவே,
      அம்மா,அவர்கள் இவ்வட்டெழுத்துக்கல்வெட்டை கண்ணாடி போட்டுப் பாதுகாத்திட ஆணையிட வேண்டுகிறேன் என்று கோரியுள்ளார்.                                                    

0 comments

Leave a Reply