ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் நாகர்கோவில் ரயில் சேவை துவக்க வேண்டும்


திருச்செந்தூர்-நாகர்கோவில் ரயில் சேவை துவக்க வேண்டும் என தமிழ்நாடு
நுகர்வோர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு
நுகர்வோர் பேரவை மாவட்ட குழு கூட்டம் உடன்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்டக்குழு செயலாளர் சிங்கராய நாடார் முன்னிலை வகித்தார்.
உடன்குடி
நகர செயலாளர் ஜெபராஜ், உடன்குடி நகர ஆலோசகர் நாராயணன், தூத்துக்குடி
மாவட்ட குழு ஆலோசகர் பரமசிவன், மெஞ்ஞானபுரம் நகர அமைப்பாளர் ஜோஸப் உட்பட
பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து
நாகர்கோவிலுக்கு தென்னக ரயில்வே ரயில் சேவை துவக்க வேண்டும். ஆங்கிலேயே
ஆட்சியில் குலசேகரன்பட்டணம், காலன்குடியிருப்பு வழியாக திசையன்விளை வரையும்
டிராலி சேவை இருந்துள்ளது.
அதே மார்க்கத்தில் ராமேஸ்வரம்,
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கன்னியாக்குமரி செல்ல இந்த சேவை
பலனளிக்கும். எனவே உடனடியாக இந்த ரயில் சேவையை துவக்க வேண்டும்.
உடன்குடியில் உள்ள நான்கு பஜார் பகுதி ரோடுகள் குண்டும், குழியுமாகவும்
மணல் குவியல்களும் உள்ளது. உடனடியாக ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்,
மெஞ்ஞானபுரம் பஸ்ஸ்டாண்டில் பொதுமக்களின் நலன் கருதி பொது கழிப்பிட வசதி
செய்திட வேண்டும். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில்
முதலிடம் வகிக்கிறது. இங்கு உலகம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமான
பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வெளியூர் செல்ல
பஸ்க்காக வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே பக்தர்களின்
நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும். உடன்குடியில் ஏராளமான குடிசை
வீடுகள் உள்ளது.
இங்கு தீ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள
சாத்தான்குளம், திருச்செந்தூர் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பலத்த சேதம்
ஏற்பட்டு விடுகிறது. எனவே உடன்குடியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க
வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

0 comments

Leave a Reply