ஆறுமுகனேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர்குளம், நத்தக்குளம், ஆவுடையார்குளம், எல்லப்பநாயக்கன் குளம் ஆகியவற்றின் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து ஆழ்குழாய் கிணறுகளை சட்டவிரோதமாக அமைத்து தனியார் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் தண்ணீரை கொண்டு செல்வதாகக் கூறியும், அதைத் தடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலர் சு.ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். க.ஆறுமுகபெருமாள், பெ.சுப்பிரமணியன், தனசிங், பட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலர் ஆர்.ரசல், ஒன்றியச் செயலர் சு.பன்னீர்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆ.துரைராஜ், பொன்கல்யாண சுந்தரம், தா.திருத்துவராஜ், பெ.தமிழ்செல்வன், ச.கண்ணன், த.கலைச்செல்வி, லட்சுமிபுரம் கிளைச் செயலர் த.ஜான் ஸ்டான்லி, 35 மகளிர் உள்பட 80 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
You Are Here: Home» News , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
0 comments