ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.95 லட்சத்தை தாண்டியது


திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ 95
லட்சத்தை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை
உண்டியல் திறந்து எண்ணப்படும். இதேபோன்று ஆகஸ்டு மாதம் உண்டியல் காணிக்கை
எண்ணப்பட்டு உள்ளது. அதன்படி முதல் உண்டியல் திறப்பு கடந்த 14ந் தேதி
திறந்து எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார்
திருமண மண்டபத்தில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணைஆணையர் சுதர்சன்,
முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்த பணியில் தூத்துக்குடி
அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா,
ஆய்வர் முருகானந்தம், தலைமை க ணக்கர் பட்டுராஜா, பொதுமக்கள் பிரதிநிதிக ள்
சுப்பிரமணியன், வேலாண்டி, அகிலன், மோகன், மற்றும் பணியாளர்கள் உண்டியல்
எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

முதல் உண்டியலில் ரூ. 49 லட்சத்து 31
ஆயிரத்து 634 இருந்தது. 505 கிராம் தங்கமும், 3,320 கிராம் வெள்ளியும்
இருந்தது. 2-வது முறையாக திறந்து எண்ணப்பட்ட கோவில் உண்டியலில் 40 லட்சத்து
68 ஆயிரத்து 831 ரூபாயும், கோசாலை உண்டியலில் 35 ஆயிரத்து 907 ரூபாயும்,
யானை பராமரிப்பு 8 ஆயிரத்து 934 ரூபாயும், அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 9
ஆயிரத்து 891 ரூபாயும், மேலக்கொவில் அன்னதான உண்டியலில் 2 ஆயிரத்து 557
ரூபாயும், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் 3 ஆயிரத்து 233 ரூபாய் கிடந்து
இருந்தது. தங்கம் 381 கிராமும், வெள்ளி 3,308 கிராம் கிடைத்து
உள்ளது.மொத்தம் 95 லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாயும், 886 கிராம்
தங்கமும், 6 ஆயிரத்து 628 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உண்டியல் வசூல் ரூ. 53 லட்சத்து 81
ஆயிரத்து 938 கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத உண்டியல் வசூல் 95
லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு
மாத உண்டியல் வசூலை விட ரூ 41 லட்சத்து 79 ஆயிரத்து 49 அதிகம் கிடைத்து
உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments

Leave a Reply