ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » ஒருவழிப்பாதையால் திருச்செந்தூரில் கடும் அவதி

திருச்செந்தூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒருவழிப்பாதையினால்

மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரோடு வசதியே இல்லாத வழித்தடத்தில்

ஒரு வழிப்பாதை செயல்பட்டுவருவது டிரைவர்களை மட்டுமல்ல அங்குள்ள மக்களையும்

எரிச்சல் அடைய செய்துள்ளது.ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உலக அளவில் புகழ்பெற்றது.

மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்கு இங்கு விழாக்கள் நடைபெற்றுவந்தாலும்

லட்சக்கணக்கான மக்கள் கூடும் கந்த சஷ்டி விழா பிரசித்திபெற்றது.

திருச்செந்தூரில் குடிகொண்டுள்ள முருகப்பெருமானை தரிசிக்க நாள் தோறும்

ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லுகின்றனர். இப்படி எல்லா விதத்திலும்

புகழ்பெற்றுவரும் திருச்செந்தூரில் ஒரு சில அடிப்படை வசதிகள் சரிவர

இல்லாமல் இருப்பது திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களை மட்டுமல்ல அங்கு

குடியிருக்கும் பக்தர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. 

பயணிகளை படுத்திஎடுக்கும் ஒருவழிப்பாதை:

திருச்செந்தூரில் ஊருக்குள் நுழைந்தவுடன் பகத்சிங் பஸ் ஸ்டாண்ட்

செயல்படுகிறது. இதுதவிர கோயில் வாசல் அருகில் ஒரு பஸ்ஸ்டாண்ட்

செயல்படுகிறது. திருச்செந்தூருக்கு தமிழ்நாட்டின் அனைத்து முக்கியமான

இடங்களிலிருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு சில பஸ்களை தவிர

பெரும்பாலான பஸ்கள் திருச்செந்தூர் கோயில் வாசல் பஸ்ஸ்டாண்ட் வரை

வந்துசெல்கின்றன. திருச்செந்தூர் கோயில் வாசலுக்கு வரும் பஸ்களும்,

நாகர்கோவில்,கன்னியாகுமரி,உடன்குடி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும்

இரும்பு ஆர்ச் வரை சென்று பின்பு வடக்குரதவீதி, கீழரதவீதி, தெற்கு ரதவீதி

வழியாக சென்று வந்தது. இதைப்போல் கோயில் வாசல் பஸ்ஸ்டாண்ட் அருகில் இருந்து

வரும் வாகனங்கள் மேலரதவீதி வழியாக இரும்பு ஆர்ச் வந்து காமராஜ் சாலை

வழியாக சென்றுவந்தது. 

இதில் எந்த விதமான போக்குவரத்து இடைஞ்சலும் ஏற்படவில்லை. மேலும் இரும்பு

ஆர்ச்சில் இருந்து பகத்சிங் பஸ்ஸ்டாண்ட் வரை உள்ள தூரம் அப்படி ஒன்றும்

அதிகமில்லை. 

அடிக்கடி காணாமல்போன போலீசாரினால்தான் போக்குவரத்து நெரிசல்:

இரும்பு ஆர்ச் அருகில் எப்பொழுதும் ஒரு டிராபிக் போலீசார் நின்றுகொண்டு

வாகனங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பர். ஆனால் அடிக்கடி அவர்கள் காணாமல்

போய்விடுவதனால்தான் இரும்பு ஆர்ச்சிலிருந்து காமராஜர் சாலைமுடிய சில

சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் தினமும் அந்தப்பகுதியில்

போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. திருவிழா காலங்களில் எந்த ஒரு வாகனமும்

கோயில் வாசல் பஸ்ஸ்டாண்ட் அருகே அனுமதிக்கப்படாமாட்டாது. ஆகையால் திருவிழா

காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல்

ஏற்பட்டதில்லை. 

ரோடே இல்லாத வழித்தடத்தில் ஒரு வழிப்பாதை:

இந்நிலையில் இரும்பு ஆர்ச்சிலிருந்து காமராஜர் சாலை வரை போக்குவரத்து

நெரிசல் ஏற்படுகிறது என்று காரணம் கூறி ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.

இந்த ஒருவழிப்பாதையின்படி மேலரதவீதிவரை வாகனங்கள் வ.உ.சி.,திடலில் இருந்து

பாரதியார் தெரு, பைபாஸ் சாலைவழியாக திருப்பிவிடப்பட்டது. தற்பொழுது

இதில்தான் பிரச்னையே ஏற்பட்டுள்ளது. தற்சமயம் அமல்படுத்தப்பட்டுள்ள

ஒருவழிப்பாதை மிகவும் குறுகலான சாலைமட்டுமல்ல போக்குவரத்துக்கே லாயக்கற்ற

நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எதிர்எதிரே வாகனங்கள்

வரும்போது பஸ் மற்றும் வேன்களின் டயர்கள் குழிக்குள் விழுந்து பலமணிநேரம்

போக்குவரத்து பாதிக்கிறது. சீரான போக்குவரத்திற்காகத்தான் ஒருவழிப்பாதை

அமல்படுத்தப்பட்டது. ஆனால் திருச்செந்தூரைப் பொறுத்தவரை வாகன ஓட்டிகளுக்கு

சிரமத்தை ஏற்படுத்ததான் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயி ல்வாசல் பஸ்ஸ்டாண்ட்டுக்கு அரசு மற்றும் தனியார்

பஸ்கள் மட்டும் வரவில்லை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து டூரிஸ்ட்

பஸ், டூரிஸ்ட் வேன்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக

அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் புதிதாக

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழிப்பாதை வழியாகத்தான் சென்றுவரவேண்டும்.

தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும்போது ஏற்படும் தூசியனால் அந்தப்பகுதி

மக்களுக்கு ஆஸ்துமா நோய் தாக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரோடுபோட்ட பிறகு அமல்படுத்தலாமே...!

போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று காரணம் கூறி ஒருவழிப்பாதை

அமல்படுத்தப்பட்டது தவறில்லை.ஆனால் ரோடு வசதியே இல்லாத ஒருவழித்தடத்தில்

அமல்படுத்தியிருப்பதுதான் வாகனஓட்டிகளையும்,பொதுமக்களையும் எரிச்சல் அடைய

வைத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒருவழிப்பாதையின் ரோட்டை

அகலப்படுத்தி புதிய தார்ரோடு போட்டபிறகு ஒருவழிப்பாதையை

அமல்படுத்தியிருக்கலாம். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து

பிரச்னைக்கு தீர்வு கண்டு வரும் எஸ்பி ராஜேந்திரன் புண்ணிய ஸ்தலமான

திருச்செந்தூரிலும் தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு

காணவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. ஒருவழிப்பாதை

அமல்படுத்திதான் ஆகவேண்டும் என்றால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மோ

சமான ஒருவழிப்பாதை யை சீரமைக்கவாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை

எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரி க்கை மட்டுமல்ல திருச்செந்தூர்

வரும் பக்தர்களின் கோரிக்கையும் இதுதான்.

அலறும் ஸ்பீக்கர்

தூத்துக்குடியில் முக்கிய சந்திப்புகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு

ஸ்பிக்கர் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் ஒலிபரப்பபட்டுவந்தது. மேலும் நோ

பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தியிருப்போர், மற்றும் மற்ற வாகனங்கள்

செல்லுவதற்கு இடைஞ்சலாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் மைக் மூலம்

போக்குவரத்து போலீசார் அறிவுறுத்திவந்தனர். இதுபோன்ற ஸ்பீக்கர்

திருச்செந்தூரிலும் செய ல்படுத்தப்பட்டு வருகிறது.லவ்டுஸ்பீக்கரில்

அனுமதிக்க ப்பட்ட அளவை தாண்டி அதிகமான சத்தத்தில் பாடல்களோ,விளம்பரங்களோ

ஒலிபரப்பினால் பறிமுதல் செய்யவேண்டிய காவல்துறையே தங்களுடைய ஸ்பிக்கரில்

அளவுக்கு அதிகமான சத்தத்தில் விதிமுறைகளை ஒலிபரப்பிவருவது மக்களிடம் ஒரு

சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. விழிப்புணர்வு அவசியம்தான்..ஆனால் குறைந்த

அளவில் ஒலிபரப்பினால் அனைவருக்கும் நல்லதாக அமையும்.

0 comments

Leave a Reply