ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » தூத்துக்குடி, திருச்செந்தூரில் ஆடி அமாவாசை ஏராளமானோர் கடற்கரையில் பித்ரு தர்ப்பணம்

தூத்துக்குடி, திருச்செந்தூரி ல் நேற்று ஆடிஅமாவாசசை தினத்தை முன்னிட்டு கடற்க ரையில் இறந்த முன்னோர்க ளுக்கு பித்ருதர்ப்பணம் செய் தனர்.ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடன் ஒரு நேர்கோட்டில்அ மையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந்நிகழ்வு நேற்று நடந்ததாகவாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.நேற்று திருவாதிரை நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணை புரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறை க்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே, அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்ற என்பது ஐதீகம். நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும் என்பதும் ஐதீகம்.இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன் னிட்டு தூத்துக்குடி திரேஸ்பு ரம் கடற்கரை, மற்றும் திருச் செந்தூர் கடற்கரை, ஸ்ரீவைகு ண் டம், மற்றும் தாமிரபரணிகரைகளில் ஏராளமானோர் அதிகாலையில் இருந்தே தங் களுடைய முன்னோர்களுக் கு பிதுர்தர்ப்பணம் செய்தனர்.திருச்செந்தூர்: திருச்செந்தார் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் நேற்றுஆடி அமாவாசையை முன்விட்டு முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். முன்னதாக கடலில் புனிதநீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகா லை 4 மணிக்கு கோயில் ந டைதிறக்கப்பட்டது. 4.30 ம ணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 7.30மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்வாரிநிகழ்ச்சி நட ந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட் டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், உதவிஆணையர் செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply