திருச்செந்தூரில் ஆண்கள் கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது.தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் 39வது தமிழ்நாடு மாநில ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வரும் 27முதல் 29ம் தேதிவரை உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பள்ளபாளையத்தில் நடக்கிறது. இப்போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஜூனியர் ஆண்கள் கபடி அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் கபடி அணியும் இப்போட்டியில் கலந்தகொள்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு நா ளை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. கலந்துகொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் மைதானத்திற்க வந்து தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். கலந்துகொள்ள வீரர்களின் வயது 20க்குள் இருக்கவேண்டும்.எடை 65 கிலோ அதற்கும் கீழ் இருக்கவேண்டும். இத்தகவலை தூத்துக்குடி மாவ ட்ட அமெச்சூர் கபடிகழத்தி ன் செயலாளர் கிறி ஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
You Are Here: Home» திருச்செந்தூர் » ஜூனியர் ஆண்கள் கபடி சேம்பியன்ஷிப் போட்டி திருச்செந்தூரில் வீரர்கள் தேர்வு
0 comments