ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் விஏஓ.,அலுவலகத்தை சீரமைக்க அமைச்சரிடம் மனு

 திருச்செந்தூரில் விஏஓ.,அலுவலக கட்டடத்தை சீரமைக்க கோரி அமைச்சர் செங்கோட்டையனிடம் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு மனு அளித்தார்.திருச்செந்தூர் கோயில் விருந்தினர் மாளிகைக்கு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். அவரை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக.,செயலர் இராமச்சந்திரன், நகரச் செயலர் மகேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.அப்போது திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு அமைச்சரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் இருந்த விஏஓ.,கட்டடமானது கடந்த திமுக.,ஆட்சியில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது பாளையங்கோட்டை சாலையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றது. நகரிலிருந்து தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் சென்று வர மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே ஏற்கனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த பழமையான கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தருமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

0 comments

Leave a Reply