திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருகை தந்தார்.
அவரை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், உதவி
ஆணையர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர் அமைச்சர்
கோயிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உட்பட அனைத்து சாமி சன்னதிகளுக்கு
சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது உதவி கலெக்டர் பொற்கொடி,
தாசில்தார் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் கோபால், நகர பஞ்.,தலைவர்
சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக.,செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய
எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் லிங்ககுமார், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை,
மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்தலிபா மற்றும் பலர் உடனிருந்தனர்.

0 comments