பத்திரங்கள் பதிவு செய்து குறைவு முத்திரை கட்டணம் செலுத்தி
ஆவணங்களை திரு ம்ப பெறாதவர்கள் பட்டிய லை பொது இடத்தில் வெளியிட மாவட்ட
நிர்வாகம் மு டிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை தவிர்த்து உடனடியாக
பணத்தை கட்டி பத்திரத்தை பெற்றுச் செல்லுமா று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது
குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் வெளியிட்டுள்ள அறி
க்கையில் கூறியிருப்பதாவது ; தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அ
லுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்து குறைவு முத்திரைக்கட்டணம் செலுத்தி
ஆ வணங்களை திரும்ப பெறாததால், குறைவு முத்திரைக் கட்டணத் தொகையை சொத்து
கிரையம் பெற்றவர்களிடம் இருந்து வசூலிக்க வருவாய் வசூல் சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி தாலுகாவில் 202 பேர்களிடம்
இருந்தும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 148 பேர்களிடமும், திருச்செந்தூர்
தாலுகாவில் 357 பேர்களிடமும், சாத்தான்குளம் தாலுகாவில் 478 பேர்களிடமும்,
கோவில்பட்டி தா லுகாவில் 424 பேர்களிடமும், ஓட்டப்பிடாரம் தாலு காவில் 14
பேரிடமும், விளாத்திகுளம் தாலுகாவில் 29 பேர்களிடமும், எட்டயபுரம்
தாலுகாவில் 8 பேரிடமும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 660 பேர்களிடம் நிலுவை
தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு
நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு
குறைவு முத்திரை தீர்வை கண்டத் தொகையினை உரிய தலைப்பில் அரசு கணக்கில்
செலுத்தி 317.2012க்குள் செலானை தூத்துக்குடி தனித்துணை ஆட்சியர்
(முத்திரை) அலுவலகத்தில் ஆஜர் செய்து சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களை
சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.31.7.2012க்குள்
குறைவு முத்திரைக்கட்டணம் செலுத்த தவறும் நபர்களின் பெயர் விபரங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ
அலுவலகம், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து பொது
இடங்களிலும் ஒட்டி விளம்பரப்படுத்தப்படும்.குறைவு முத்திரை தீர்வைக்
கட்டணத்தினை வசூலிக்க வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் அசையும் மற்றும் அசையா
சொத்தினை ஜப்திசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரம்
பாக்கிதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments