ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் , ஸ்ரீவைகுண்டம் » இலவச கண் பரிசோதனை முகாம்


சாத்தான்குளம்:சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.முகாமில் சங்க செயலர்
சாமுவேல் வரவேற்றார். தனிஅலுவலர் மாரிமுத்து, முகாம் குறித்து விளக்கி
பேசினார். முகாமில் திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் மேரிலீலா
வாடிக்கையாளர்களுக்கு விவசாய பயிர் கடன்கள், கூட்டுப்பொறுப்பு
குழுவினர்களுக்கு கடன் மற்றும் இதர கடன்களையும் வழங்கி முகாமை துவக்கி
வைத்து பேசினார்.

முகாமில் மொத்தம் 121 பேர் பரிசோதனை மேற்கொண்டதில் 76பேர்
கண்புரை நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் கண்ணாடி அணிய
தேவையானவர்கள் என்றும், 45 பேர் குறைபாடுகள் அற்றவர்கள் எனவும்
கண்டறியப்பட்டனர். அகர்வால் கண் ஆஸ்பத்திரி குழுவினரில் சுப்பிரமணியன்
முகாம் மேலாளராகவும், ஜெயகாந்தன் கண் மருத்துவ ஆலோசகராகவும், தங்கம் விழி
ஒளி பரிசோதகராகவும் கலந்து கொண்டு முகாமை நடத்தி ஆலோசனை வழங்கினர்.
மருத்துவ முகாமில் தனிஅலுவலர் வின்ஸ்டன், கூட்டுறவு சங்க ஊழியர்கள்,
செயலர்கள், ஆசிரியர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மத்திய கூட்டுறவு பாங்க்
சரக மேற்பார்வையாளர் சீயோன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம்
ஏற்பாடுகளை சாத்தான்குளம் கூட்டுறவு கடன்சங்க மேலாளர் எட்வின்
தேவாசீர்வாதம், எழுத்தர் ராம கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்
செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply