ஆத்தூர்-ஆறுமுகநேரி ரோட்டில் சிதறிய உப்புக்குவியலால் அப்பகுதியை கடக்க வாகனங்கள் திணறின.
ஆத்தூர்-ஆறுமுகநேரி ரோட்டில் வறண்டியவேல் விலக்கு அருகே அந்த வழியே வந்த லாரியிலிருந்து சிதறிய உப்பு குவியலாகக் கிடந்தது. வளைவில் கிடந்த குவியல் இருபுறமும் சுமார் 100 மீட்டர் வரை நீண்டு சென்றதால் அவ்வழியே வந்த வாகனங்கள் திணறியது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்தப்பகுதியில் தடுமாறி விழாமல் வண்டியை ஓட்டிச் செல்ல பெரும் பாடுபட்டனர்.
இவ்வழியே உப்பு, நிலக்கரி போன்ற சரக்குகளை சரியாக மூடாமல் ஏற்றி வரும் லாரிகள் ஆத்தூர் பகுதி முழுவதும் ரோட்டில் அவற்றை சிதறிச் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே ஆத்தூர் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சரக்குகளை சிதறிச் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments