காயல்பட்டணம்: காயல்பட்டணம் பகுதியில் கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கர்களை ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையிலான போலீசார் அதிரடியாக அகற்றினர்.
தனியார் சொகுசுகார்கள் மற்றும் வாடகை கார், வேன் போன்ற வாகனங்களின் கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் வெயில் வெப்பத்தைத் தவிர்த்திட கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது என்பது வாடிக்கையாகும். இந்த கருப்பு ஸ்டிக்கர்களால் கார், வேன் போன்ற வாகனங்களுக்குள் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை.
இதனை தவிர்க்கும் நோக்கத்தில் கார் உட்பட்ட வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கார், வேன் உட்பட்ட வாகனங்களை நிறுத்தி, அவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர். கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றாத வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இதில் சிலர் தாங்களாகவே முன்வந்து கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் போலீசார் காயல்பட்டிணம் பைபாஸ் ரோடு, ஆறுமுகநேரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றினர். இந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

0 comments