அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு எழுதிய 140 மாணவ, மாணவிகளில் 134 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 96 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் ஜினோஸ்லின் புனிதா 460 மதிப்பெண்கள்
பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளியின் தாளாளர் செல்வராஜ்,
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை
பாராட்டினர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் இப்பள்ளியின் தேர்ச்சி 95 சதவீதம்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments