ஆறுமுகனேரி வட்டாரத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் பிசான பருவ சாகுபடி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இவ்வட்டாரத்தில் குலசேகரன்பட்டினத்தில்தான் அதிகமழை பெய்துள்ளது. இந்த மழையால் திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.
You Are Here: Home» arumuganeri , Daily News , ஆறுமுகநேரி » ஆறுமுகனேரி வட்டாரத்தில் அறுவடை பாதிப்பு
0 comments