காயல்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினரும், சிறப்புரையாற்றியவர்களும்.
காயல்பட்டினர் பஜாரில் வெள்ளிக்கிழமை மதியம் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் உள்ள தஃவா சென்டருக்குள் ஆறுமுகனேரி காவல்துறையினர் கடந்த 27ஆம் தேதி இரவு அனுமதியின்றி நுழைந்து அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து காயல்பட்டினத்தில் ஜும்மா தொழுகைக்கு பிறகு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தஃவா மையத்தின் தலைவர் எம்.ஏ.புஹாரி, நிர்வாகி ஜக்கரிய்யா, நவாஸ் அஹமத், கலாமி அபுல்ஹஸன், அல்தாஃப், தமுமுக நகர தலைவர் ஜாஹிர் ஹூஸைன் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் நியாஸ் உள்பட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட நேரத்தில் திருச்செந்தூர்-தூத்துக்குடிக்கிடையிலான போக்குவரத்துஅடைக்கலாபுரம் வழியாக திருப்பி விடப்பட்டது.


0 comments