இரா.தவசிமுத்து நாடாரின் மகனான தியாகி த.தங்கவேல் நாடார் 1903 இல் பிறந்தார். இந்து நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை பயின்ற இவர் இளமையில் கொழும்பில் இருந்த போது தென்னற்தோட்டத்தில் பணிபுரிந்த “வாடி“ எனப்பட்ட தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் அமைத்து தலைவரானார். ஆந்திரா சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிகம் செய்தார். பின்பு பிறந்த ஊருக்குத் திரும்பி வந்து நகை செய்துவிற்கும் ”காசுக் கடை” நடத்தி வந்தார். அந்நேரம் 1941-42 நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்பட்டார்.
சுதந்திரப்போராட்டக் காலத்தில் மணம் ஆகி குழந்தைகளுடன் இருந்தவர். பிற போராட்ட வீரர்களனைவரும் இவரைவிட மிக வயது குறைந்தவர்களாக இருந்தனர். எனவே சுதந்திரப்போரட்டக் காலத்தில் வீரர்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் பொருளுதவி செய்பவராகவும் இருந்தார். குலசை லோன் துரை தாக்குதலின் போது இராஜகோபாலன் வைத்திருந்த ரிவால்வர் இவர் வீட்டிலிருந்து பரிசோதித்து கொண்டு செல்லப்பட்டதாகும். ஆறுமுகநேரியின் வளர்ச்சிகாக அனைத்துப் பணிகளிலும் தலைவர்களோடு தலைவராக இருந்து செயல்பட்டார். சுதந்திர போராட்டத்தால் தன்னுடைய வசதியான தாலுகாவில் முதலாவதாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை அமைத்து தொண்டாற்றியதால் ”தாலுகாவின் தந்தை” என்றும் சுரக்கமாக ”தானாத்தானா” என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்ட்டார். ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டார். 17.10.1983 இல் காலமானார்
தலைவர் | கிராம காங்கிரஸ் |
தலைவர் | தாலுகா காங்கிரஸ் |
தலைவர் | தாலுகா விவசாயிகள் சங்கம் |
தலைவர் | தாலுகா மகாந்மாநூற்பு யக்ங சங்கம் |
தலைவர் | தாலுகா பூமிதான இயக்கம் |
முதல் தலைவர் | காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசிடபுள்யூ |
தலைவர் | தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் |
தலைவர் | தாலுகா அரிசன சேவாச் சங்கம் |
செயலாளர் | கா.ஆ.மே.நி.பள்ளி |
ஆறுமுகநேரி உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மருத்துவமனை கா.ஆ.மேல்நிலைப் பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பல பொது நிறுவனங்கள் உருவாகப் பாடுபட்டார். தாலுகா முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சி அமைப்பை அமைத்தச் சிறப்பு இவருக்கு உண்டு.
0 comments