சண்முக சுந்தரம் நாடார் அவர்களுடைய புதல்வராக தியாகி எம்.எஸ்.செல்வராஜன் 15.10.1922 இல் பிறந்தார். 1938 இல் திருச்செந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆசிரியப் பயிற்சியினை தம்முடைய சுதந்திரப் போராட்ட சிறைவாசத்திற்கு பின்னர் (194-1946) நிறைவு செய்து காயல்பட்டினம் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1946-1949 வரை பணியாற்றினார்.
சுதந்திரப் போராட்டம் : 1942 செப்டம்பர்
கீரனூர் உப்புச்சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது இவருடைய வயது 20 ஆறுமுகநேரியில் முதன் முதலாக கைது செய்யப்பட்டபோது “வந்தேமாதரம்ஜெய்ஹிந்” என்ற சொற்களை மீண்டும் மீண்டும் கூறியதால் போலீசாரின் குண்டாந்தடி தாக்குதல் மற்றும் சிறையில் பல கொடுமைகளுக்கு உள்ளான இவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர். கூட்டுறவு மூலம் பல அரிய நலத்திட்டங்களைத் தென் பகுதிக்குக் கொண்டு வந்தவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து குடிநீர் சாலை கல்வி வசதிகளுக்காகப் பாடுபட்டார். ஆலயப் பிரவேசத்திற்காகப் பாடுபட்டார்.
தலைவர் | சுதந்திர போராட்டத் தியாகிகள் காங்கிரஸ் |
தலைவர் | உப்புத் தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனைச் சங்கம் 1949-1989 |
ஸ்தாபகர் | திருச்செந்தூர் கூட்டுறவு மில் நாசரேத் (1960-67) |
ஸ்தாபகர் | கூட்டுறவு விவசாய வங்கி |
ஸ்தாபகர் | நூற்பாலை கூட்டுறவுச் சங்கம் |
ஸ்தாபகர் | கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கம் |
ஸ்தாபகர் | உப்புத் தொழிலாளர் சங்கம் |
ஸ்தாபகர் | அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி |
ஸ்தாபகர் | கா.ஆ.மேல்நிலைப்பள்ளி |
உப்பு தொழிலாளர்களை கூட்டுறவு மூலம் பங்குதாரர் ஆக்கினார். ஜில்லா போர்டு உறுப்பினராக இருந்த போது பல தொடக்கப் பள்ளிகளை மாவட்ட மெங்கும் திறந்துள்ளார் இவர் வகித்தப்பதவிகள் எண்ணிலடங்காதவையாகும்.
ஆறுமுகநேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளின் துயர்துடைக்க சென்னை அன்னப்பழம் அம்மாள் அறக்கட்டளை மூலம் நல உதவித்திட்டங்களை ஏற்பாடு செய்தார்.
0 comments