ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» August , Daily News , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடந்தது.


ஆறுமுகநேரி மேலசண்முகபுரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி புனித அன்னம்மாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை பாடற்திருப்பலி நடந்தது. கடந்த 13ம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நடந்தது. நிகழச்;சிக்கு ஆறுமுகநேரி பங்கு தந்தை இருதயராஜ் தலைமை வகித்தார். இணை பங்குதந்தை அலெக்ஸாண்டர் திருவிழா மாலை ஆராதனை நடத்தினார். திருவிழாவை முன்னிட்டு மடத்துவிளையில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு  முக்கிய வீதி வழியாக மேல சண்முகபுரத்தில் உள்ள அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது. அங்கு சிறப்பு சிறப்பு திருப்பலி, ஆராதனையை தொடர்ந்து மெயின் பஜார் வழியாக மடத்துவிளை புனித சவேரியார் ஆயலம் சென்றடைந்தது.
திருவிழா தினமான 14ம் தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இதனை பங்குதந்தை இருதயராஜ்ää இணை பங்கு தந்தை அலெக்ஸாண்டர் ஆகியோர் நடத்தினார். திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  ஊர்கமிட்டியினர் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply