ஆறுமுகநேரி பஞ். பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிக்கன்,மட்டன் கடைகளில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் காயாமொழி வட்டார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மெயின் பஜாரில் உள்ள கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் உரிய உரிமம் பெற்றுள்ளனரா பெறப்பட்ட உரிமத்தை புதுப்பித்துள்ளனரா, கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துகிறார்களா, இறந்து போன மற்றும் நோய்வாய்ப் பட்ட கோழி, ஆட்டிறைச்சிகளை விற்பனை செய்கிறார்களா என சோதனை நடத்தினர். இதனை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இம்மாதம் இறுதிக்குள் லைசென்ஸ் எடுக்கப்படாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
You Are Here: Home» August , Daily News , ஆறுமுகநேரி » ஆறுமுகநேரி பகுதியில் நேற்று சிக்கன் மட்டன் கடைகளில் சுகாதாரத் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
0 comments