சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு நிறுவன மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். உதவித் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு பிரிவு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி நாதன்கிணறு ஆறுமுகபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரும்பூர் அருகே உள்ள குலைக்கநாதபுரம்ää முக்காணி ஆகிய இடங்களில் நடந்த பட்டாசு பட்டரை விபத்தின் போது சாகுபுரம் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் உதவித் தலைவர் சுபாஷ்டாண்டன் மற்றும் உயர் அதிகாரிகள்ää அலுவலர்கள்ää தொழிலாளர்கள்ää தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி காந்தி சேவா சங்கத்தின் சார்பில் காந்தி மைதானத்தில் சால்ட் லேபர் யூனியன் பொருளாளர் பால்பாண்டியன் தேசியக்கொடியேற்றினார். காந்தி சேவா சங்கத்தில் சப் இன்ஸ்பெக்டர் குமாரசெல்வம் தேசிய கொடியேற்றினார். பின்னர் தியாகி எம்.எஸ்.செல்வராஜன் திடலில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு அரசு மகளிர் லே;நிலைப் பள்ளி கல்விக்குழு தலைவர் சண்முகவெங்கடேசன் தலைமை வகித்தார். காந்தி சேவா சங்க துணைத் தலைவர் கந்தையா வரவேற்றார். தியாகி எம்.எஸ்.செல்வராஜன் படத்தை பக்தஜன சபை பொருளாளர் அரிகிருஷ்ணன் திறந்து வைத்தார். நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன் தியாகிகளுக்கு கதராடை வழங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் குமரகுரு, தெரிசை அய்யப்பன்ää ஆறுமுகநேரி லயன்ஸ் கிளப் செயலாளர் முருகேசன், காந்தி சேவா சங்க பொருளாளர் காந்திää உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.
ஆறுமுகநேரி நகர காங். மற்றும் இளைஞர் காங். சார்பில் நடந்த விழாவிற்கு நகர தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். நகர இளைஞர் காங். தலைவர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் பஞ்.யூனியன் துணைத் தலைவர் பேச்சம்மாள் தேசியக் கொடியேற்றினார். மாவட்ட காங். துணைத் தலைவர் சண்முகம், வட்டார காங். தலைவர் தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர். மாவட்ட ஐஎன்டியூசி துணைத் தலைவர் ராமச்சந்திரன், சிவகணேசன், மாவட்ட சேவாதள துணை செயலாளர் சுப்பிரமணி, நகர துணைத் தலைவர் கோயில்மணி, அமைப்பு சார தொழிற்சங்க தலைவர் அழகேசன், சென்னை ஜெயப்பிரகாஷ், கே.டி.கோசல்ராம் நற்பணி மன்ற தலைவர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொதுச் செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்;
ஆறுமுகநேரி பஞ். அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு நிர்வாக அதிகாரி சுயம்பு தலைமை வகித்தார். தலைவர் பொன்ராஜ் தேசியக் கொடியேற்றினார். நிகழச்சியில் துணைத் தலைவர் சண்முகசுந்தரம்ää கவுன்சிலர்கள் லெட்சுமணன், தெய்வகனி, சந்திரன், செல்விரவி, செல்வி மாணிக்கம், மகராஜன், புனிதா, கல்யாணி, மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரியில் நகர பாஜக சார்பில் 65வது சுதந்திர தினவிழா கொண்டாடினர். விழாவிற்கு ஒன்றிய பொருளாளர் தங்கபாண்டியன் தலைமை வகிதத்hர். இளைஞர் அணி பொதுச்செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஒய்வு பெற்ற ஆசிரியர் Dr.தினகரன் தேசியக் கொடியேற்றினார். நிகழச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய தலைவர் பற்குணபெருமாள், இந்து முன்னணி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டர் குமாரசெல்வம் தேசியக் கொடியேற்றினார்.
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 65வது ஆண்டு சுதந்திர தினவிழா சிறப்பாக நடந்தது.
விழாவிற்கு பள்ளியின் டிரஸ்டியும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த உதவித் தலைவருமான ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். டி.சி.டபிள்யூ. நிறுவன உதவித் தலைவர் சுபாஷ் டாண்டன் முன்னிலை வகித்தார். மாணவர் கோபிசந்தர் வரவேற்றார். பள்ளி டிரஸ்டியும் டி.சி.டபிள்யூ. நிறுவன உதவித் தலைவருமான ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு மாணவ மாணவிகள் அணிவப்பு மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. மாணவி சாய்லட்சுமி நன்றி கூறினார். பள்ளி முதல்வர் கிறிஸ்டினா பிரபாகரன், தலைமையாசிரியை சுரோமணி ஜெயமுருகன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி காமராஜ் சோமசுந்தரி மழலையர் மற்றம் தொடக்கப் பள்ளியில் 65வது சுதந்திர தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜெயானந்தன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை நாககன்னி வரவேற்றார். நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன் தேசியக் கொடியேற்றினார். மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. காமராஜ் பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற ஓவிய, பேச்சுப் போட்டியில் பரிசு பெற்ற மணாவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
ஆறுமுகநேரி இந்து மேல்நிலைப் பள்ளி, இந்து துவக்கப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு ஆறுமுகநேரி நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன் தலைமை வகித்தார். கவுன்சிலர் மகராஜன் முன்னிலை வகித்தார். ஆறுமுகநேரி பஞ்.தலைவர் பொன்ராஜ் தேசியக் கொடியேற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழச்சி நடந்தது. நிகழச்சியில் இந்து துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மாரித்தங்கம், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராஜ், சரஸ்வதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயசுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மடத்துவிளை சந்தன சமநடுநிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை எமிலி தலைமை வகித்தார். ஆறுமுகநேரி பஞ்.தலைவர் பொன்ராஜ் தேசியக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பஞ்.துணைத் தலைவர் சண்முகசுந்தரம்ää கவுன்சிலர்கள் செல்விரவி, மகராஜன், லெட்சுமணன், மகாலிங்கராஜ், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments