ஆறுமுகனேரியில் அதிமுக அரசின் நூறாவது நாள் வெற்றி விழாவில் இனிப்பு வழங்குகிறார் பேரூராட்சி மன்றத் தலைவர் சா.பொன்ராஜ்.
ஆறுமுகனேரியில் அதிமுக அரசின் நூறாவது நாள் விழாவினை புதன்கிழமை இரவு கொண்டாடினர்.
ஆறுமுகனேரியில் பஜாரில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான சா.பொன்ராஜ் தலைமை வகித்தார்.நகர தலைவர் இ.அமிர்தராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சி.மகராஜன், லட்சுமணன், வி.சிவபெருமாள், கே.பி.சந்திரன், விவசாய அணி செயலாளர் தி.தனசேகர், ஒன்றிய பொருளாளர் தனசேகரன், வார்டு கிளை செயலாளர்கள் பொன்லிங்கம், சக்திவேல், சோடா லட்சுமணன், மோகன், சின்னத்துரை, சிவசாம்பமூர்த்தி, பூல்ராஜ், மூர்த்தி, நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சா.பொன்ராஜ் இனிப்பு வழங்கினார்.
0 comments