நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி சனிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ச.சோமசுந்தரி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் முத்துராஜ் உறுதிமொழி வாசிக்க பள்ளி ஆசிரியர்கள், நாட்டுநலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் உள்பட மாணவ மாணவிகள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
You Are Here: Home» August , ஆறுமுகநேரி » நாலுமாவடி பள்ளியில் மதநல்லிணக்க உறுதி மொழி.
0 comments